1665.‘எற்றே பகர்வேன், இனி, யான்?
     என்னே! உன்னின் பிரிய
வற்றே உலகம் எனினும்,
     வானே வருந்தாது எனினும்,
பொன் - தேர் அரசே! தமியேன்
     புகழே! உயிரே! உன்னைப்
பெற்றேன்; அருமை அறிவேன்;
     பிழையேன்! பிழையேன்!' என்றான்.

     உன்னின் பிரியவற்றே உலகம் எனினும் - (இராமா!)
உன்னிடத்திருந்து  உலகம் பிரியும் வல்லமை உடையதாயினும்;  வானே
வருந்தாது  எனினும் -
தேவர்களும் மனம்வருந்தார் ஆனாலும்;
பொன்தேர் அரசே! - பொன் மயமான தேரில் ஏறி வரும் அரசனே;
தமியேன் புகழே! - துணையில்லாத எனது புகழே;  உயிரே! - என்
உயிரே; உன்னைப் பெற்றேன், அருமை அறிவேன் - உன்னைப் பெற்று
உன் அருமையை அறிந்துள்ளேன்; இனி யான் எற்றே பகர்வேன்- இனி
மேல் நான் என்ன சொல்லுவேன்; என்னே-; பிழையேன் பிழையேன் -
பிழைக்க மாட்டேன்;  என்றான்-

     வானும் உலகமும் உன் பிரிவை ஏற்கும் வல்லமை  உடையதாயினும்
என்னால் அது இயலாதுஎன்றான். ‘பிழையேன், பிழையேன்'  புலம்பலில்
வந்த அடுக்கு.                                                60