இலக்குவன் பதில்  

1756.ஆண்தகை அம் மொழி பகர, அன்பனும்,
தூண் தகு திரள் புயம் துளங்க, துண்ணெனா,
மீண்டது ஒர் உயிர் இடை விம்ம விம்முவான்,
‘ஈண்டு, உனக்கு அடியனேன் பிழைத்தது யாது?’
                              என்றான்,

    ஆண் தகை அம்மொழி பகர - ஆடவருள் சிறந்தோனாகிய
இராமன் அந்த வார்த்தைசொல்ல; அன்பனும் -இலக்குவனும்; தூண்தரு
திரள் புயம்
-தூணுக்கு ஒப்பாகியதிரண்ட தோள்; துளங்க- நடுங்கும்படி;
துண் எனா - திடுக்கென்று அஞ்சி;  மீண்டது ஒர் உயிர் இடைவிம்ம
விம்முவான்
- திரும்பிவந்ததாகிய ஓர் உயிர் இடையில் மீண்டும்
கலங்குமாறு துடிப்பவனாய் (இராமனை நோக்கி); ‘உனக்கு-;
அடியனேன்
- யான்; ஈண்டுப் பிழைத்தது யாது?’-இங்கே செய்த தவறு
என்ன;  என்றான் -

     இராமனுடன் சீரை சாத்திய போது உயிர் திரும்பியது இலக்குவனுக்கு.
இப்போதுஅயோத்தியில் பெற்றோர்க்கு உதவியாக இரு என்று இராமன்
தனன்னோடு வராதபடி தடுத்தபோது இடையே இருப்பதா. போவதா என்று
துடிக்கிறது  எனக் கொள்க.                                     151