1794. | ‘முழுக் கலின் வலிய நம் மூரி நெஞ்சினை, மழுக்களின் பிளத்தும்’ என்று, ஓடுவார்; வழி ஒழுங்கிய கண்ணின் நீர்க் கலுழி ஊற்றிடை இழுக்கலில் வழுக்கி வீழ்ந்து, இடர் உற்றார் - சிலர் |
சிலர் -; “முழுக் கலின் வலிய நம் மூரி நெஞ்சினை - பெரிய கல்லைப் போலவலியதாக உள்ள நமது கடு மனத்தை; மழுக்களின் பிளத்தும்’ - கோடரியால்இரண்டாக்குவோம்;’ என்று ; ஓடுவார் - ஓடுகின்றார்கள்; வழி ஒழுக்கியகண்ணின் நீர்க் கலுழி ஆற்றிடை - வழியில் ஒழுகவிடப்பட்ட கண்ணீராகிய கலங்கியநீர்ப்பெருக்காகிய ஆற்றின்கண்; இழுக்கலில் - சேற்றில்; வழுக்கி வீழ்ந்து- சறுக்கி விழுந்து; இடர் உற்றார் - துன்பம் அடைந்தார். கலின் - கல்லின் என்பதன் விகாரம். மழு - கோடரி. ஒடுகின்றவர் தமது கண்ணீர் ஆற்றுச் சேற்றில் வழுக்கி, வீழ்ந்தார்கள் என்பதாம். இழுக்கல் - சேறு. “இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல்’ என்னும் குறள் காண்க. (குறள். 415.) 189 |