1800.நல் நெடுங் கண்களின் நான்ற நீர்த் துளி -
தன் நெடுந் தாரைகள் தளத்தின் வீழ்தலால்,
மன் நெடுங் குமரன்மாட்டு அழுங்கி, மாடமும்
பொன் நெடுங் கண் குழித்து, அழுவ போன்றவே.

     நல் நெடுங் கண்களின் நான் நீர்த்துளிதன்ற - (மேல்மாடத்திருந்து
இராமனைக்கண்ட மகளிர்) நல்ல நீண்ட கண்களிலிருந்து  விழுந்த
நீர்த்துளியினது; நெடுந் தாரைகள்- நீண்ட நீர்ப்பெருக்கு;  தளத்தின்
வீழ்தலால்
- மேல் தளத்திலிருந்து கீழேவிழுகின்ற தன்மையால்; மாடமும்-
மாளிகையும்;  மன் நெடுங் குமரன் மாட்டு அழுங்கி- அரச
குமாரனிடத்தில் வருந்தி; பொன் நெடுங் கண் குழித்து - அழகிய பெரிய
இடத்தைக் குழி செய்து;  அழுவ போன்றவே - அழுகின்றன போல்வன.

     மேல் மாடியிலிருந்து  காணும் மகளிர் கண்ணீர்த் தாரை மாடித்
தளத்திலிருந்து  கீழே விழும் காட்சி மாளிகையே அழுவதுபோல் என்பது
தற்குறிப் பேற்றயிணயாம்- கண் - இடம் (விழி) சிலேடை.            195