நகரின் பொலிவு அழிதல்  

1804.கொடி அடங்கின மனைக் குன்றம்; கோ முரசு
இடி அடங்கின; முழக்கு இழந்த பல் இயம்;
படி அடங்கலும், நிமிர் பசுங் கண் மாரியால்,
பொடி அடங்கின, மதில் புறத்து வீதியே.,

     மனைக்குன்றம்- மனைகளாகிய மலைகளில்; கொடி அடங்கின-
கொடிகள் அடங்கிப் போயின; கோ முரசு-அரச முரசம்; இடி அடங்கின-
ஒலித்தல்இல்லாமற் போயின; பல் இயம் -பல வாத்தியங்கள்; முழக்கு
இழந்த
- ஒலியைஇழந்தன; படி அடங்கலும் -பூமி
முழுவதிலும்;
மதில்புறத்து வீதி - மதிலின் புறம்பே உள்ளவீதிகள; நிமிர்பசுங்கண்
மாரியால்
- பெருகுகின்ற கண்ணீர் மழையால்; பொடிஅடங்கின -
புழுதிஅடங்கப் பெற்றன.

     கொடி கட்டப்பெற்ற மாடங்கள் கொடி இன்றி இருத்தல் வாத்தியங்கள்
ஒலியாமை முதலியனதுயரச் சின்னங்களாம்.  அயோத்தியின் துயரத்தை
உலகத்தின்மேல் ஏற்றிக் கூறியது உயர்வுநவிற்சியே; ஆயினும், உலகமே
வேதனைப் படுதற்குரியநிகழ்ச்சிதானே!                           199