பலரும் உறங்குதல் 1849. | வாவி விரி தாமரையின் மா மலரின் வாசக் காவி விரி நாள் மலர் முகிழ்த்தனைய கண்ணார், ஆவி விரி பால் நுரையின் ஆடை அணை ஆக, நாவி விரி கூழை இள நவ்வியர் துயின்றார். |
வாவி விரி தாமரையின் - குளத்தின்கண் மலர்ந்த தாமரையாகிய; மா மலரின்- சிறந்த மலரினுள்; வாசம் - வாசனை உள்ள; வீரி காவி நாள்மலர் - விரிந்த நீலோற்பல மலர்; முகிழ்த்து அனைய - குவிந்து கிடந்தாற் போன்ற; கண்ணார் - கண்ணை உடைய மாதரது; ஆவி விரி பால் நுரையின் ஆடை - வெப்ப ஆவிவெளிப்படும் பால் நுரைபோன்ற மென்மையான ஆடையை அணையாகக் கொண்டு; நாவி விரி -கஸ்தூரி மணம் வீசப்பெற்ற; கூழை - முடிகூடாத கூந்தலை உடைய; இள நல்வியர்- இளமையான பெண்மானைப் போலும் சிறுமிகள்; துயின்றார் - உறங்கினார்கள். இள நவ்வியர் என்பதால் இவர்கள் சிறுமிகள் என்பதும், ‘கண்ணார்’ என்பவர்அச்சிறுமியரது தாய்மாரும். அவரனைய பெண்டிரும் என்பதும் போதரும். சிறுமியர் ஆதலின் தாயரதுஆடை அணையாகக் கொண்டு அவர்களிடமே. போல என்று என்க. தாமரைப் பூவிற்குள் நீலோற்பலம் (கருங்குவளை) போல என்று முகத்தில் கிடந்த கண்களைக் கூறினார். இவர்களும் உறக்க அவசத்தில்கண்களை மூடினர் ஆதலின் ‘கருங்குவளை முகிழ்த்து’ என்றார். முகிழ்த்து’ என்பது மலரும் பருவத்து அரும்பாதுல் அறிக. இங்ஙனமே அடுத்த பாடலிலும் பொருள் வருதல் அறியலாம். 10 |