1851. | பூ அகம் நிறைந்த புளினத் திரள்கள்தோறும், மா வகிரின் உண்கணர் மடப் பிடியின் வைக, சேவகம் அமைந்த சிறு கண் கரிகள் என்ன, தூ அகல் இல் குந்த மற மைந்தர்கள் துயின்றார். |
அகம் பூ நிறைந்த புளினத் திரள்கள் தோறும் - தம்மிடத்தில் மலர்கள்நிறைந்துள்ள மணல் மலைகளிடமெல்லாம்; மா வகிரின் உண்கணர் மடப்பிடியின் வைக -பிளந்த மாவடுப் போன்ற மை உண்ட கண்களை உடைய மகளிர் இளைய பெண் யானையைப் போலத்தூங்கித் தங்க; தூ அகல் இல் குந்த மறமைந்தர்கள் - தசை எப்போதும் அகலாமல்இருக்கப்பெற்ற குந்தப் படையை உடைய வீரமறவ இளைஞர்கள்; சேவகம் அமைந்த சிறுகண் கரிகள்என்ன - பிடியைப் பாதுகாப்புச் செய்யும் தொழில் புரிகின்ற சிறிய கண்ணை உடைய களிற்றியானைகள் போல; துயின்றார் - துங்கினார்கள். தூ - என்பது தசை. ஊன்தங்கிய குந்தம். சேவகம் - வீரச் செயல். ‘யானைகட்கும் கூடம்’என்றும் ஆம். சேவகம் - உறக்கம் என்பதும் ஒர் உரை “யானை சேவகம் அமைந்தது (7280)“தறிபொரு களிநல்யாதனை சேவகம் கள்ளி” (8837) என்பன காண்க. இனிச் சேவகம் என்பது பாதுகாவல்; வீரமறத்தொழில் குறித்து வருதலை; ‘வீரச் சேவகச் செய்கை’ (7281) என்ற பாடற்பகுதியால் அறிக. குந்தம் - ஒரு படைக்கலத்தின் பெயர். கணர் - கண்ணர் - தொகுத்தல்விகாரம். 12 |