கலிவிருத்தம் 1859. | ‘தேவியும் இளவலும் தொடர, செல்வனைப் பூ இயல் கானகம் புக உய்த்தேன் என்கோ? கோவினை உடன் கொடு குறுகினேன் என்கோ? யாவது கூறுகேன், இரும்பின் நெஞ்சினேன்? |
‘தேவியும் இளவலும் தொடர - மனைவியாகிய சீதையும் தம்பியாகிய இலக்குவனும்தொடர்ந்து வர; செல்வனை - செல்வமகனாகிய இராமனை; பூ இயல் கானகம் -மலர்கள் பொருந்திய காட்டிடத்தில்; புக உய்த்தேன் என்கோ? - செல்லும்படிவிட்டுவந்தேன் என்று சொல்வேனோ; கோவினை - இராமனை; உடன்கொடு - கூடஅழைத்துக்கொண்டு; குறுகினேன் என்கோ? - நகரத்தை அணுகினேன் என்று சொல்வேனோ; இரும்பின் நெஞ்சினேன் - இரும்பின் ஒத்து வலிய நெஞ்சுடைய யான்; யாவது கூறுகேன் -யாது சொல்வேன்?’ ‘பூவியல் கானகம்’ என்றது அதனையும் கடுமையாகக் கூறாமல் மென்மையாகக் கூறல் வேண்டும்என்பதால். 20 |