1864. | முடிவுற, இன்னன மொழிந்த பின்னரும், அடி உறத் தழுவினன், அழுங்கு பேர் அரா இடி உறத் துவளுவது என்னும் இன்னலன்; படி உறப் புரண்டனன்; பலவும் பன்னினான். |
முடிவு உற - தன் கருத்து (இராமனை மீள அழைத்துச் சேறலே என்பது) முடிவாகத்தெரியும்படி; இன்னன - இந்த வார்த்தைகளை; மொழிந்த பின்னரும் - சொல்லியபிறகும்; இடி உற - இடி ஒலி கேட்டு; அழுங்கு பேர் அரா - மனம் வருந்தும்பெரும்பாம்பு; துவளுவது - துடித்துச் சோர்கின்றது; என்னும் - என்றுசொல்லத்தக்க; இன்னலன் - துன்பம் உடையவனாய்; அடி உறத் தழுவினன் -இராமனது கால்களை நன்கு பற்றிக்கொண்டு; பலவும் பன்னினான் - பலவார்த்தைகளையும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு; படிமிசைப் புரண்டனன் - பூமியில் விழுந்து புரண்டான். இராமன் திரும்பி வருபவனாகத் தோன்ற வில்லை யாதலின் சுமந்திரன் வருத்தம்பெரிதாயிற்று. பன்னுதல் - ஒன்றையே திரும்பத் திரும்பச் சொல்லுதல். 25 |