1870.‘ “வினைக்கு அரு மெய்ம்மையின்
     வனத்து விட்டனன்,
மனக்கு அரும் புதல்வனை”
     என்றல் மன்னவன் -
தனக்கு ‘அருந்தவம்; அது
     தலைக்கொண்டு ஏகுதல்
எனக்கு அருந் தவம்; இதற்கு
     இரங்கள். எந்தை! நீ.

     ‘எந்தை-; வினைக்கு அரு மெய்ம்மையன் - செய்தற்கு அரிய
சத்தியத்தை உடையதயரதன்;  “மனைக்கு அரும் புதல்வனை- தன்
குடிக்கு அரியமகனை;  வனத்து  விட்டனன்ழு - காட்டிற்குச்செல்லுமாறு
அனுப்பினான்; என்றல் - என்று  உலகோரால் சொல்லப்படுதல்; மன்னவன்
தனக்கு -
அரசனுக்கு; அருந்தவம் -அருமையான தவமாகும்;  அது -
அம்மன்னவன் ஆணையை; தலைக்கொண்டு -சிரமேல்தாங்கி; ஏகுதல்-
வனம் செல்லுதல்;  எனக்கு அருந்தவம் -எனக்குஅரிய தவமாகும்; 
இதற்கு  நீ இரங்கல் - இதற்கு நீ இரங்காதே.

     அரிய மகனைக்காட்டிற்கு அனுப்புதல், அதுவும் அறத்தைக்
காப்பாற்ற வேண்டிய அனுப்புதல் என்பது செயற்கரும் தவம் ஆதலின், அது
‘மன்னவனுக்கு அருந்தவம்’ என்றான். அதனை மகன் நிறைவேற்றினால்
அன்றி அத் தவம் நிலை பெறாதாம். ஆகவே, அதன்படி நடந்து வனம்
செல்லுதல் எனக்குத் தவம் என்றான் இராமன். இருவர் தவத்தையும் கெடுக்க
எண்ணுதியோ என்பது குறிப்பு.                                   31