1873.‘ “வெவ்வியது, அன்னையால்
     விளைந்தது, ஈண்டு ஒரு
கவ்வை என்று இறையும் தன்
     கருத்தின் நோக்கலன்,
எவ் அருள் என்வயின்
     வைத்தது, இன் சொலால்,
அவ் அருள் அவன்வயின்
     அருளுக!” என்றியால்.

     ‘ஈண்டு - இவ்விடத்து;  அன்னையால் விளைந்தது - கைகேயியால்
உண்டாக்கியது; வெவ்வியது  ஒரு கவ்வை - கொடியதாகிய ஒரு துன்பம்;
என்று-;  இறையும் - சிறிதளவும்; தன் கருத்தின் - (பரதன்) தன்னுடைய
மனத்தின்கண்;  நோக்கலன் - கருதாதவனாய்; எவ் அருள் என் வயின்
வைத்தது-
எத்தகையதொரு அருளைஎன்னிடம் (பரதன்) வைத்துள்ளானோ;
அவ் அருள் - அத்தகைய அருளை;  அவன் வயின் -அந்தத் தயரத
மன்னனிடத்தும்;  அருளுக’ - காட்டுவானாக;  என்றி - என்று
சொல்லுவாய்.’

     கைகேயிமாட்டும், தயரதன்மாட்டும் என்னிடம் உள்ள அன்பிற்சிறிதும்
குறையாது அன்போடு நடந்துகொள்ளுமாறு பரதன்பால் கூறவும் என்றான்.
“ஆயவன் முனியும் என்று அஞ்சினேன் அலால்,  தாய் எனும் பெயர்
எனைத் தடுக்கற்பாலதோ” என்று பரதன் கூறுவதைஇங்கே கருதுக.
(2173.)                                                      34