1874.‘வேண்டினென் இவ் வரம் என்று, மேலவன்
ஈண்டு அருள் எம்பிபால் நிறுவி, ஏகினை,
பூண்ட மா தவனொடும் கோயில் புக்கு, இனிது
ஆண் தகை வேந்தனை அவலம் ஆற்றி, பின்,

     ஏகினை- (நீ) இங்கிருந்து  புறப்பட்டுச் சென்று;  பூண்ட
மாதவனொடும் -
மேற்கொண்ட பெருந்தவத்தை உடைய வசிட்ட
முனிவனோடும்;  கோயில் புக்கு - அரண்மனைஅடைந்து;ஆண்தகை
வேந்தனை -
ஆடவருள் சிறந்த தயரதனை;  இனிதுஅவலம் ஆற்றி -
இனிமையாக மனத்துயரத்தைத் தேற்றி;  இவ்வரம்வேண்டினென் என்று -
இந்த வரத்தைத்தரவேண்டும் என்று வேண்டிக் கொண்டு;  ஈண்டுஅருள்
எம்பிபால் நிறுவி -
என்னிடத்து வைத்துள்ள அருளை
என்தம்பியாகிய
பரதன்பாலும் வைக்க வேண்டும் என்று நிற்குமாறு செய்து;பின் -பிறகு....

     அடுத்த செய்யுளில் முடியும் முதலில் வரத்தை வாங்கிக்கொண்டு
பின்னர் அவ்வரம் இன்னதுஎன்று கூறித் தம்பிபால் அருளை நிறுவுக
என்றது  ஒரு நயம்.                                           35