1876. ‘முறைமையால் எற் பயந்
     தெடுத்த மூவர்க்கும்
குறைவு இலா என் நெடு
     வணக்கம் கூறி, பின்
இறைமகன் துயர் துடைத்து
     இருத்தி, மாடு’ என்றான் -
மறைகளை மறைந்து போய்
     வனத்துள் வைகுவான்.

     மறைகளைமறைந்து  போய் - வேதங்களுக்கு எட்டாமல்  மறைந்து
நின்று; வனத்துள் வைகுவான் - எடுத்த அவதாரத்திற்கேற்பவனத்தின்கண்
வசிப்பவனாகிய இராமன்; என் பயந்து எடுத்த மூவர்க்கும்- என்னைப்
பெற்றெடுத்த தாயர்;  மூவர்க்கும்  -மூன்றுபேர்க்கும்; முறைமையால் -
முறைமைப்படி;  குறைவு இலா -சிறிதும்
குறைவுபடாத;என் நெடு
வணக்கம் கூறி -
என்னுடைய பெரிய வணக்கத்தைச் சொல்லி;  பின்-
பிறகு;  இறை மகன் துயர் துடைத்து - தயரதனதுதுன்பத்தை நீக்கி;
மாடு- அவன் பக்கல்;  இருத்தி’- நீங்காது இருப்பாயாக;  என்றான் -.

     அன்னையர்க்குச் சொல்ல வேண்டியதைச் சுமந்திரன்பால் கூறினன்.
‘வேதம்.......தெரிகிலாஆதி தேவர்’ (2516).  இப்படலத்து26 ஆம் பாடலால்
‘தூய மெய்யுணர்வால் அணுகும் காட்சியான்’என்று  சொல்லி,  இங்கே
‘மறைகளை மறைந்து  போய் வனத்துள் வைகுவான்’ என்று  முடித்துள்ள
அருமைப்பாட்டை அறிந்து   நுகர்க.                              37