1883. | ‘மின்னுடன் பிறந்த வாள் பரத வேந்தற்கு, “என் மன்னுடன் பிறந்திலென்; மண்கொண்டு ஆள்கின்றான் - தன்னுடன் பிறந்திலென்; தம்பி முன் அலென்; என்னுடன் பிறந்த யான் வலியென்” என்றியால். |
‘மின் உடன் பிறந்த வாள் பரத வேந்தற்கு - ஒளியுடன் கூடிய வாளை ஏந்திய பரதசக்கரவர்த்திக்கு; ‘என் மன்னுடன் பிறந்திலென் கொண்டு ஆள்கின்றான் தன்னுடன்பிறந்திலென் - இராச்சியத்தைக் கொண்டு ஆளுகின்ற அரசனாகிய பரதனுடன் பிறந்தேனும்அல்லேன்; தம்பி முன் அலேன் - தம்பியாகிய சத்துருக்கனனுக்கு அண்ணனாகவும் இல்லேன்;என்னுடன் பிறந்த நான்; வலியன்’ - இன்னமும் வலிமையோடுதான் இருக்கின்றேன்; என்றி - என்று சொல்லுக.’ பரதனுக்குச் சொல்லியனுப்பிய செய்தி. இலக்குவன் விரக்தி, கோபம், இகழ்ச்சி, அவலம் ஆகியவற்றின் உச்ச நிலையில் இருந்து பேசுகிற பேச்சாக இது உள்ளது. தம்பியாகியசத்துருக்கனன் பரதனுடன் சேர்ந்திருத்தல்பற்றி அவனையும் வெறுத்தான் ஆதல் அறிக. ‘ஆல்’ஈற்றசை. 44 |