இராமன் இளவலை அடக்க, சுமந்திரன் புறப்படுதல் 1884. | ஆரியன் இளவலை நோக்கி, ‘ஐய! நீ சீரிய அல்லன செப்பல்’ என்றபின், பாரிடை வணங்கினன், பதைக்கு நெஞ்சினன்; தேரிடை வித்தகன் சேறல் மேயினான். |
ஆரியன்இளவலை நோக்கி - இராமன் இலக்குவனைப் பார்த்து; ‘ஐய! -ஐயனே; நீ-; சீரிய அல்லன செப்பல்’ - சிறந்தனஅல்லாத சொற்களைச் சொல்லாதே;’ என்றபின் -என்ற பிறகு; தேரிடைவித்தகன் - தேர்செலுத்தலில் திறமையாளனாகிய சுமந்திரன்; பதைக்கும் நெஞ்சினன் -துடிக்கும்மனம் உடையனாய்; பாரிடை வணங்கினன்- நிலத்தில் விழுந்து வணங்கி; சேறல் மேயினான் -செல்லத்தொடங்கினான். வித்தகன் - திறமை உடையவன். இங்குத் தேரோட்டும் திறமையும், மந்திரித் தன்மையும்ஆம். 45 |