சீதை செல்லுதல் 1891. | சிறு நிலை மருங்குல் கொங்கை ஏந்திய செல்வம் என்னும் நெறி இருங் கூந்தல் நங்கை சீறடி, நீர்க் கொப்பூழின் நறியன, தொடர்ந்து சென்று நடத்தலின், ‘நவையின் நீங்கும் உறு வலி, அன்பின் ஊங்கு ஒன்று உண்டு’ என உணர்வது உண்டோ?1 |
சிறுநிலை மருங்குல் - மிகவும் இளைத்த (சிறிய நிலைமை உடைய) இடையுடன்; கொங்கை - (பருத்த) முலைகளை; ஏந்திய - தாங்கிய; செல்வம் என்னும் - திரு என்று சொல்லப்பெறும்; நெறி இருங்கூந்தல் நங்கை - நெறிப்புடைய கரிய கூந்தலைஉடைய சீதையின்; சீறடி - சிறிய பாதம்; நீர்க் கொப்பூழின் நறியன -நீரின்கண் தோன்றும் குமிழியைக் காட்டிலும் மென்மையானவை (ஆயினும்); தொடர்ந்து சென்று நடத்தலின் - இராமனைப் பின்பற்றிச் சென்று நடக்கின்றபடியால்; ‘நவையின்நீங்கும் - துன்பத்தில் நீங்கிய; உறுவலி அன்பின் - மிக்க வலிமை உடையஅன்பைக் காட்டிலும்; ஒன்று - வலியுடைய ஒரு பொருள்; ஊங்கு உண்டு’ - இங்கேஉள்ளது; என உணர்வது உண்டோ - என்று அறிய முடியுமா (முடியாது என்றபடி). அன்பு எதையும் சாதிக்கும். சீதையின் மெல்லிய அடி இராமனுடைய வேகத்துக்கும், காட்டின்கடுமைக்கும் ஈடு கொடுத்து நடக்கிறதென்றால் இராமன்பால் அவள் கொண்ட அளப்பருங் காதலேஅதற்குக் காரணம் என்பதாம். அடியை நீர்க்குமிழி போன்ற மென்மை உடையது என்பது அரிய உவமை. 52 |