1909. துஞ்சினானை, தம் உயிரின் துணையைக்
     கண்டார்; துணுக்கத்தால்
நஞ்சு நுகர்ந்தார் என உடலம்
     நடுங்காநின்றார்; என்றாலும்,
அஞ்சி அழுங்கி விழுந்திலரால்;-
     அன்பின் தறுகண் பிறிது உண்டோ? -
வஞ்சம் இல்லா மனத்தானை
     வானில் தொடர்வான் மனம் வலித்தார்.

     (அத்தேவியர்) துஞ்சினானை - இறந்தவனை; தம் உயிரின்
துணையை
- தம்உயிர்க்குத் துணையாக இருந்த நாயகனை;  கண்டார் -
பார்த்தார்கள்; துணுக்கத்தால்- வெருவுதலால்; நஞ்சு நுகர்ந்தார் என -
விடம் உண்டவர் போல; உடலம்நடுங்காநின்றார் - உடல் நடுக்க
மெடுக்க இருந்தார்கள்;  என்றாலும் -இப்படிப்பட்ட  துக்கம்  வந்த
போதிலும்; அஞ்சி அழுங்கி விழுந்திலர் - பயந்து மனம் துயரம் மிக்கு
விழவில்லை; வஞ்சம் இல்லா மனத்தாளை- வஞ்சனையற்ற மனம் உடைய
தசரதனை; வானில் தொடர்வான் மனம் வலித்தார் - இறந்து பின்பற்றிச்
சென்றுவானுலகில் அடைய மனத்தின்கண் உறுதி மேற்கொண்டார்;
அன்பின் தறுகண் பிறிது உண்டோ? -அன்பைக் காட்டிலும் வலியது
வேறு உண்டோ? (இல்லை என்றபடி).

     வானுலகில் தயரனை அடைய உறுதி பூண்டபடியால் இங்கே மனம்
சோர்ந்து போகவில்லையேதவிரத் துக்கம் இல்லை  என்பது  பொருள்
இல்லை - இறக்கத் துணிந்தனர் என்பதாம். ‘ஆல்’அசை.              70