1937. | எதிர்கொடு ஏத்தினர்; இன் இசை பாடினர்; வெதிர் கொள் கோலினர், ஆடினர்; வீரனை, கதிர் கொள் தாமரைக் கண்ணனை, கண்ணினால், மதுர வாரி அமுது என, மாந்துவார். |
வெதிர் கொள் கோலினர்- மூங்கிலால் ஆகிய தண்டத்தை உடைய முனிவர்கள்; வீரனை - இராமனை; கதிர் கொள் தாமரைக் கண்ணனை- ஒளி படைத்த தாமரைக்கண்களை உடையவனை; கண்ணினால் - தங்கள் கண்களால்; மதுர வாரி அமுது என -இனிய பாற்கடல் தந்த அமுதம் போல; மாந்துவார் - உண்டு; எதிர் கொடு -வரவேற்று; ஏத்தினர் - துதித்து; இன் இசை பாடினர் - இனிய இசை பாடி; ஆடினர் -(ஆனந்தக் களிப்பால்) ஆடினர். மது ரவாரி - பாற்கடல். வெதிர் - மூங்கில் - ஏக தண்டம், திரி தண்டம் ஏந்துதல்முனிவர் இயல்பு. “முக்கோல் கொள் அந்தணர்” (கலித். 126:4) என்பது காண்க. 12 |