1942. | கன்னி நீக்க அருங் கங்கையும் கைதொழா, ‘பன்னி நீக்க அரும் பாதகம், பாருளோர், என்னின் நீக்குவர்; யானும், இன்று என் - தந்த உன்னின் நீக்கினென்; உய்ந்தனென் யான்’ என்றாள். |
கன்னிநீக்க அருங் கங்கையும் - அழியாத் தன்மை என்றும் நீங்குதல் இல்லாதகங்கையும்; கைதொழா - கைகளால் (இராமன்) வணங்கி; ‘பாருளோர்- இப் பூமியில் உள்ளோர்; பன்னி நீக்கஅரும் பாதகம் -சொல்லிப் போக்க முடியாத பாவங்களை; என்னின்- என் மூலமாக; (முழுகி) நீக்குவர்- போக்கிக்கொள்வார்கள்; யானும் - நானும்; இன்று - இன்றைக்கு; என்தந்த உன்னின்-என்னைத் தந்த திருமாலாகிய உன்னால்; நீக்கினென் - (என்பாவங்களைப்)போக்கிக் கொண்டேன்; யான் உய்ந்தனென்’ - நானும் பிழைத்தேன்;’என்றாள்- என்று சொன்னாள். பிறர் செய்த பாவங்களைப் போக்கும் கங்கை இன்று தன்னைத் தந்த இறைவனாகிய இராமனேமுழுகியதால் தன் பாவங்களைப் போக்கிக் கொண்டு மகிழ்ந்தாளாகக்கூறினாள். 17 |