1945.வஞ்சி நாண இடைக்கு, மட நடைக்கு
அஞ்சி அன்னம் ஒதுங்க, அடி அன்ன
கஞ்சம் நீரில் ஒளிப்ப, கயல் உக,
பஞ்சி மெல் அடிப் பாவையும் ஆடினாள்.

     பஞ்சின் மெல்லடிப் பாவையும்- செம் பஞ்சு போன்ற மென்மையான
பாதங்களை உடையசீதையும்;  இடைக்கு வஞ்சி நாண - தன்இடைக்கு
வஞ்சிக் கொடி நாணப்பட்டுத்தோற்றொதுங்க;  மடநடைக்கு அன்னம்
அஞ்சி ஒதுங்க -
அழகிய தன் நடைக்கு அன்னப் பறவைதோற்றுப்
பயந்து  பின்னிட;  அடி அன்ன கங்சம் நீரில் ஒளிப்ப - தன் பாதம்
போன்ற தாமரை தோற்றுத் தண்ணீரில் மறைந்துகொள்ள; கயல் உக -
கயல் மீன்கள் (கண்ணுக்குத்தோற்றுக்) கெட;  ஆடினாள் -  நீராடினாள்.

     வஞ்சி, அன்னம், தாமரை, கயல் ஆகியவை நீரில் உள்ளவை. நீராடும்
சீதையின்உறுப்புநலன் கண்டு அவை தோற்றதாகக் கற்பனை செய்தார்.
கயல் என்பதனால் கண்ணுக்குத் தோற்றுஎன்பது  வருவிக்கப் பெற்றது. 20