1956. | காழம் இட்ட குறங்கினன், கங்கையின் ஆழம் இட்ட நெடுமையினான், அரை தாழ விட்ட செந் தோலன், தயங்குறச் சூழ விட்ட தொடு புலி வாலினான். |
காழம் இட்ட குறங்கினன் - காழம் என்னும் ஒருவகை உடையை இறுக அணிந்த துடையைஉடையவன்; கங்கையின் ஆழம் இட்ட நெடுமையினான் - கங்கையின் ஆழத்தைக் கண்டறிந்தபெருமை படைத்தவன்; அரை தாழ விட்ட செந்தோலன் - இடுப்பிலிருந்து கீழே தொங்கவிடப்பட்ட சிவந்த வார்ப்பட்டை உடையவன்; தயங்குற - விளங்கும்படி; சூழவிட்ட - இடுப்பைச் சுற்றிக் கட்டிய; தொடு புலி வாலினான் - ஒன்றோடொன்றசேர்த்துக் கட்டப் பெற்ற புவி வாலை உடையவன். காழம் எனப்து இடுப்பிலிருந்து தொடைவரை அணியும் சிறிய காற்சட்டை. காழகம் எனவும்வரும. அரையிலிருந்து தொங்கவிடப்பெற்ற செந்திறத் தோலாகிய வார்ப் பட்டை அம்பு முதலியனதீட்டுதற்காம் என்க. புலிவால்களை ஒன்றோடொன்று பிணைத்து இடுப்பைச் சுற்றிக் கட்டியுள்ளான். 4 |