1977.செஞ்செவே சேற்றில் தோன்றும்
     தாமரை, தேரில் தோன்றும்
வெஞ் சுடர்ச் செல்வன் மேனி
     நோக்கின விரிந்த; வேறு ஓர்
அஞ்சன நாயிறு அன்ன
     ஐயனை நோக்கி, செய்ய
வஞ்சி வாழ் வதனம் என்னும்
     தாமரை மலர்ந்தது அன்றே.

     செஞ்செவே சேற்றில் தோன்றும் தாமரை - செக்கச் செவேல்
என்று சேற்றில்தோன்றிய செந்தாமரை மலர்;  தேரில் தோன்றும் -
ஒற்றைச் சக்கரத் தேரில்உதயமான;  வெஞ்சுடர்ச் செல்வன் மேனி
நோக்கின விரிந்த
- வெம்மையான கதிர்களைஉடைய சூரியனது
வடிவத்தைப் பார்த்து மலர்ந்தன; செய்ய - சிவந்ததாகிய; வஞ்சி -வஞ்சிக்
கொடிபோல்பவளாகிய சீதையினிடத்தில்; வாழ் வதனம் என்னும் தாமரை-
உள்ளமுகம் என்னும் தாமரை;  வேறு ஓர் அஞ்சன நாயிறு அன்ன
ஐயனை நோக்கி -
செஞ்சூரியனில் மாறுபட்டு வேறொன்றான
கருஞாயிற்றை ஒத்த இராமனைப் பார்த்து;  மலர்ந்தது -மலர்ந்து
விளங்கியது.

     கருமை நிறம் உடைய இராமனை அஞ்சன ஞாயிறு என்றார்.  தடாகத்
தாமரை செஞ்ஞாயிறு  கண்டுமலர்ந்தது;  முகத் தாமரை கருஞாயிறு கண்டு
மலர்ந்தது.                                                   25