1993. | திருஉளம்எனின், மற்று என் சேனையும் உடனே கொண்டு, ஒருவலென் ஒருபோதும் உறைகுவென்; உளர் ஆனார் மருவலர்எனின், முன்னே மாள்குவென்; வசை இல்லேன்; பொரு அரு மணி மார்பா! போதுவென், உடன்’ என்றான். |
‘பொரு அரு மணி மார்பா! - ஒப்பற்ற அழகிய மார்பினை உடையவனே!; திரு உளம்எனின் - உன் மனத்திற்கு உடன்பாடாக இருக்குமானால்; மற்று என் சேனையும் உடனே கொண்டு- நான் வருவதோடு அல்லாமல் என்னுடைய சேனைகளையும் கூட அழைத்துக் கொண்டு; ஒருபோதும்-எல்லாக் காலத்தும்; ஒருவலென்- நீங்காதவனாய்; உறைகுவென் - உன்னுடனேதங்குவேன்; மருவலர் உளர் ஆனார் எனின் - தீங்கு செய்யும் பகைவர்கள் யாரேனும்வருவார்கள் ஆயின்; முன்னே மாள்குவென் - உனக்கு முன்னே அவர்களுடன் போர்செய்து (அவர்களை அழித்து) நானும் இறந்துபடுவேன்; வசை இல்லேன் - (அடைக்கலம் புகுந்தவரைமாற்றானிடம் காட்டிக் கொடுத்தான் என்ற) பழிச் சொல்லுக்கு ஆளாகமாட்டேன்; உடன்போதுவென் என்றான் - உன்னுடனேயே வருவேன் என்று கூறினான். ‘மற்று’ வினைமாற்று. நான் வருதல் அன்றிச் சேனையும் உடன் கொண்டு வருவேன் எனப் பொருள் படுதலின். மருவலரை அழித்து மாள்தலும் அழியாது முன்னே மாளுதலும்வகைக்கு இடனாகாமை உணர்க. 41 |