கலிநிலைத்துறை 2028. | ‘நிறையும், நீர், மலர், நெடுங் கனி, கிழங்கு, காய் கிடந்த’ குறையும் தீயவை; தூயவை குறைவு இல; எம்மோடு உறையும் இவ் வழி, ஒருங்கினில் உயர் தவம் முயல்வார்க்கு இறையும், ஈது அலாது இனியது ஓர் இடம் அரிது; இன்னும், |
‘நிறையும்நீர் - நீர் நிரம்பியுள்ளது; மலர், நெடுங்களி, கிழங்கு, காய் கிடந்த - பூக்களும், பெரும்பழங்களும், கிழங்குகளும், காய்களும் உள்ளன; தீயவை குறையும் - தீவினைகளும் போய்விடும்; தூயவை குறைவு இல - நற் செயல்களுக்குயாதொரு குறைவும் இல்லை; இவ்வழி- இவ்விடத்தில்; எம்மொடு உறையும் -எம்மோடுநீங்களும் வசியுங்கள்; ஒருங்கினில் உயர்தவம் முயல்வார்க்கு -மன ஒருமையால் மிக உயர்ந்த தவத்தைச் செய்கிறவர்களுக்கு; இறையும் -தங்குதற்கு இடம்; ஈது அலாது இனியது ஓர் இடம் அரிது’ - இது வல்லாமல் இனிமையான வேறு ஓர் இடம் கிடைத்தல்அரிதாகும்; இன்னும் - மேலும்.... தவம் செய்வார்க்கு உணவு வகைகள், மலர், நீர் முதலியன நிரம்பியிருத்தல்,தீச்செயல்களுக்கு இடமின்மை, நற்செயல் விளைதல், மன ஒருமைக்கு வேண்டிய அமைதிச் சூழல்இத்தனையும் கூடியிருத்தலின் இது மிகச் சிறந்த இடம் என்றான் முனிவன். இறுத்தல் - தங்குதல்; இணை - தங்கும் இடம். 30 |