2040. | கல் அளைக் கிடந்து அகடு வெந்து அயர்கின்ற கதழ் பாம்பு, அல்லல் உற்றில, அலை புனல் கிடந்தன அனைய; வல்லை உற்ற வேய், புற்றொடும் எரிவன, மணி வாழ் புல் எயிற்று இளங் கன்னியர் தோள் எனப் பொலிந்த; |
கல் அளைக்கிடந்து - மலைக்குகையிலே தங்கி; அகடு வெந்து - வயிறுதீய்ந்து; அயர்கின்ற - சோர்கின்ற; கதழ் பாம்பு - சீற்றம் உடைய பாம்பு; அல்லல் உற்றில - (இப்பொழுது) துன்பம் அடைய வில்லை; அலை புனல் கிடந்தன அனைய- அலை வீசும் தண்ணீரில் கிடப்பதைப் போல உள்ளன வாயின; வல்லை உற்ற வேய் -பெருங்காட்டில் முளைத்த மூங்கில்; புற்றொடும் எரிவன - தாம் இருந்த புற்றோடும்எரிந்து போயின (இப்போது); மணி வாழ் புல் எயிற்று இளம் கன்னியர் - முத்துமணி வாழ்கின்ற சிறிய பற்களை உடைய வேட்டுவப் பெண்களின்; தோள் எனப் பொலிந்த - தோள்களைப் போலச் செழிப்புடைய வாயின. வல்லை - காடு . மணி என்பது இங்கு முத்து. முத்துப் போல் தங்கியுள்ள பற்களை உடைய எனஉரைக்க. 42 |