மூவரும் சித்திரகூட மலையைக் காணுதல்  

2045.வெளிறு நீங்கிய பாலையை
     மெல்லெனப் போனார்,
குளிரும் வான் மதிக் குழவி, தன்
     சூல் வயிற்று ஒளிப்ப,
பிளிறு மேகத்தைப் பிடி எனப்
     பெரும் பளைத் தடக் கை
களிறு நீட்டும் அச் சித்திர
     கூடத்தைக் கண்டார்.

     வெளிறு நீங்கிய பாலையை - (அம் மூவரும்) குற்றம் நீங்கிய
அப்பாலை நிலத்தை;மெல்லெனப் போனார் - மெல்லக் கடந்து
சென்றார்கள்;  குளிறும் வான் -ஒலிக்கின்ற விண்ணிலே உள்ள;  மதிக்
குழவி -
சந்திரனாகிய குழந்தை(இளஞ்சந்திரன்);  தன் சூல் வயிற்று
ஒளிப்ப -
தன்னுடைய நீர்க்கருப்பம் உற்றவயிற்றிலே மறைந்து  கொள்ள;
பிளிறு மேகத்தை - இடிக்கின்ற  மேகத்தை;  பிடி என- பெண் யானை
எனக் கருதி;  களிறு - ஆண் யானையானது; பெறும் பனைத் தடக்கை -
தன்னுடைய பெரிய பனைமரம் போன்ற நீண்ட கையை; நீட்டும் -
(வானத்தை நோக்கி)நீட்டுகின்றதாகிய;  சித்திர  கூடத்தைக் கண்டார் -
சித்திரகூட மலையைக்கண்டார்கள்.

     பாலையின் குற்றம்வெம்மையாம்.  அஃது  இப்போது  இல்லை
ஆதலின்  ‘வெளிறு்நீ்ங்கியபாலை’ ஆயிற்று.  பிறைமதி மறைந்த கார்
மேகத்தைத் தன் சூலுற்ற பிடி என்று கருதி ஆண் யானை கைநீட்டும்
என்று சித்திரகூட மலையின் வளமும் உயர்ச்சியும் கூறினார்.            47