2084.சக்கரம் தானவன் உடலில் தாக்குற,
எக்கிய சோரியின் பரந்தது, எங்கணும்
செக்கர்; அத் தீயவன் வாயின் தீர்ந்து, வேறு
உக்க வான் தனி எயிறு ஒத்தது. இந்துவே!

     சக்கரம் தானவன் உடலில் தாக்குற - (திருமாலின்) சக்கரப் படை
கால நேமியாகியஅசுரன் உடலில் சென்று தாக்கிய அளவில்; எக்கிய
கோரியின் -
மேல் எழுந்த அவனது இரத்தம் போல; எங்கணும் செக்கர்
பரந்தது -
எல்லா இடங்களிலும் செவ்வானம்பரவியது;  அத் தீயவன்
வாயின் தீர்ந்து -
அக் கொடிய காலநேமியின் வாயிலிருந்துகழன்று;
வேறு உக்க வான் தனி எயிறு - தனியாகச் சிந்திய வெண்மையான
ஒற்றைக்கோரைப் பல்லை; இந்து ஒத்தது - சந்திரன் ஒத்திருந்தது.

     செவ்வானம் இரத்தமாகவும், சந்திரன் அசுரனது சிந்திய கோரைப்
பல்லாகவும்உவமிக்கப்பெற்றன.                                   39