2090. | தேக்கு அடைப் படலையின் செறிவு செய்து, பின், பூக் கிளர் நாணலின் புல்லு வேய்ந்து, கீழ்த் தூக்கிய வேய்களின் கவரும் சுற்றுறப் போக்கி, மண் எறிந்து, அவை புனலின் தீற்றியே. |
தேக்கு அடைப் படலையின் செயிவு செய்து - தேக்க இலை கொண்டு மேல் கூரையைச்செறிய மூடி; பின் - பிறகு; பூக் கிளர் நாணலின் புல் வேய்ந்து- பூத்துவிளங்கும் நாணற் புல்லை மேலே பரப்பி; கீழ்த் தூக்கிய வேய்களின் - கீழேநிறுத்தப் பெற்ற மூங்கில் கழிகளால்; சுற்றுறச் சுவரும் போக்கி - சுற்றுப்பக்கமெல்லாம் சுவரைச் செய்து; மண் எறிந்து - அதன்மேல் மண்ணை அடித்து; அவை -அச்சுவரை; புனலின் தீற்றி - தண்ணீரால் மெழுகிப் பூசி. முதலில் இலைகளை வேய்ந்து அதன் மேல் நாணற் புல்லைப் பரப்பினான் என்க. இலைகள்நாணற்புல் விழாமல் தாங்குவன. மூங்கிற் பிளாச்சுகளின் மேல் மண்பூசித் தண்ணீரால் மெழுகிச்சுற்றுச் சுவர் அமைத்தானாம். ஏகாரம் ஈற்றசை. 46 |