2092. | மயிலுடைப் பீலியின் விதானம் மேல் வகுத்து, அயிலுடைச் சுரிகையால் அருகு தூக்கு அறுத்து, எயில் இளங் கழைகளால் இயற்றி, ஆறு இடு செயலுடைப் புது மலர் பொற்பச் சிந்தியே. |
மயிலுடைப் பீலியின் மேல் விதானம் வகுத்து - மயிலின் தோகை கொண்டு மேல்கட்டியைச் செய்தமைத்து; அயில் உடைச் கரிகையால் - கூர்மை உடைய வாளால்; அருகுதூக்கு அறுத்து - பக்கங்களிலே தொங்கல் தொங்கவிட்டு; எயில் - மதிலை; இளங்கழைகளால் இயற்றி - இளைய மூங்கில்களால் செய்தமைத்து; ஆறு இடு செயல் உடைப்புதுமலர் பொற்பச் சிந்தி - ஆற்றின் அருகே இருந்து கொணர்ந்த நல்ல புதிய மலர்களை அழகுறஅங்கங்கே சிதறி. மகளிர் இருக்கும் இடம் ஆதலின் மயில் தோகையால் விதானம் அமைத்தான். பக்கங்களில்மாலைகளைத் தொங்க விடுதல் அழகு நோக்கி. ஏகாரம் ஈற்றசை. 47 |