தூதுவர் பதிலும் பரதன் விசாரிப்பும்  

2104.‘வலியன்’ என்று அவர் கூற மகிழ்ந்தனன்;
‘இலை கொள் பூண் இளங்கோன் எம்பிரானொடும்
உலைவு இல் செல்வத்தனோ?’ என, ‘உண்டு’ என,
தலையின் ஏந்தினன், தாழ் தடக் கைகளே.

     அவர்- அத் தூதுவா; ‘வலியன்’ என்று கூற- (தயரதன்) நலமாக
உள்ளான் என்று கூற;மகிழ்ந்தனன்- (அது கேட்டுப் பரதன்) மகிழ்ச்சி
அடைந்தான்;  (பின்னர்ப் பரதன்)‘எம்பிரானொடும்- எம் தலைவனாகிய
இராமபிரானொடும்’ இலைகொள் பூண் இளங்கோன் -இலைத்தொழிலாற்
சிறப்புற்ற அணிகளை அணிந்த இளைய பெருமாளாகிய இலக்குவன்; உலைவு
இல்செல்வத்தனோ’
- தளர்ச்சியும் தடுமாற்றமும் இல்லாத செல்வம்
உடையவனாய் இருக்கின்றானோஎன்று கேட்க; ‘உண்டு’ என- (அத்
தூதுவர் அங்ஙனமே அவர்களும் குறையின்றி) நலமாய்இருக்கின்றார்கள்
என்று கூறு;  தாழ்தடக் கைகள்- தாள் அளவாக நீண்ட கைகளை;
தலையில்ஏந்தினன்- (இராம லக்குவர்கள் உள்ள திசை நோக்கிப் பரதன்)
தலைமேல் வைத்து வணங்கினான்.

     ‘வலியன்’ என்றது  நிகழ்வை நோக்கப் பொய்தான்; எனினும்
யாதொன்றும் தீமை இலாதசொல்லும் வாய்மை என உணர்க. இராமனை
உடன் காத்து இணைபிரியாது இருத்தலின் ‘இளங்கோனை’முதலிற்
கூறினார். ‘ஓடு’ உருபு இங்கே உயர்ந்த இராமன் மேல் வந்தது; “ஒருவினை
ஒடுச்சொல்உயர்பின் வழித்தே” என்பவாகலின். (தொல். சொல். வேற். மயங்.
8) மனக்குறைவும்,  உடல்தளர்வும் இல்லாமல் இருப்பதே செல்வம் ஆகும்.
“செல்வம் என்பது சிந்தையின் நிறைவே” (குமர -திரட்டு - 475) ‘நோய்
அற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பவாதலின்,  ‘உலையில்
செல்வத்தனோ’ என்பதனுள் எல்லாம் விசாரித்தானாக ஆயிற்று. முன்
பாட்டிற்போல் ‘இராமன்அரகச் செல்வத்தைப் பெற்றுத் தற்போது
இழந்துள்ளான்’ என்பது பரதன் சொல்வழிஅவனையறியாமலே வந்ததை
‘உலைவு இல் செல்வத்தனோ’ என்பது குறிப்பிடும்.  இது குறிப்புமொழி.