2114. | வில்லின் வேதியர், வாள் செறி வித்தகர், மல்லின் வல்லர், கரிகையின் வல்லவர், கொல்லும் வேல் குந்தம் கற்று உயர் கொற்றவர், தொல்லை வாரணப் பாகரும், சுற்றினார். | வில்லின் வேதியர்- வில் வித்தைக்குரிய நூலில் தேர்ச்சியடைந்தவர்களும்; வாள்செறி வித்தகர்- வாட்போர் புரிவதில் திறமை உடையவரும்; மல்லின் வல்லார்- மல்சண்டையில் வலிமை படைத்தவரும்; கரிகையின் வல்லவர்- குற்றுடைவாளை வீசுதலில் வல்லவர்களும்; கொல்லும்- (பிறரை) அழிக்கின்ற; வேல் குந்தம் சுற்று உயர் கொற்றவர்-வேல் ஈட்டி ஆகிய படைகளை வீசக் கற்று உயர்ந்த வெற்றியாளர்களும்; தொல்லை- பழமையான(அனுபவம் மிக்க); வாரணப் பாகரும்- யானை ஓட்டுநரும்; சுற்றினார்- சூழ்ந்து வந்தார்கள். வேதம் வல்லவர் வேதியர். இங்கு வில் வேதம்; தனுர் வேதம் என்று வடிமொழியிற்குறிப்பிடுவர். கொல்லும் வேல் உபசார வழக்கு. 13 |