பரிசிலர் பரிசில் பெறாதுள்ள நகரின் நிலை காணல்  

2133. கள்ளை, மா, கவர் கண்ணியன் கண்டிலன்-
பிள்ளை மாக் களிறும், பிடி ஈட்டமும்,
வள்ளைமாக்கள், நிதியும், வயிரியர்,
கொள்டிள மாக்களின் கொண்டனர் ஏகவே,

     மா- வண்டுகள்; கள்ளை கவர் கண்ணியன் - தேனைஉண்கின்ற
மலர் மாலையைஅணிந்தவனாகிய பரதன்; வள்ளை மாக்கள்- (அரசனை
வாழ்த்திப் பாடும்) மங்கலவள்ளைப் பாடகரும்; வயிரியர் - யாழ் முதலிய
இயங்களாற் பாடுகின்றவர்களும்; பிடி ஈட்டமும்-பெண்யானைத்
திரளையும்; நிதியும் - செல்வத்தையும்; கொள்ளை மாக்களின்-
கொள்ளையடித்துக் கொண்டு போகின்ற
திருடர்களைப்போல;
கொண்டனர் ஏக
-பரிசிலாகப் பெற்றுக் கொண்டு செல்ல; கண்டிலன் -.

     பிள்ளை, மா களிறும், பிடியும் என்று பிரித்துக் கன்றும், யானையும்,
பிடியும் எனவும்பொருள் உரைக்கலாம்.  வயிரியர் - பாணர் - வாத்திய
இசைஞர் என்பது பொருள். அளவறியாதுவாரிக்கொண்டு செல்வது திருடர்
இயல்பு. அதனை ஈண்டுப் பரிசிலர்க்கு உவமை ஆக்கினார்.            32