நகரை நோக்கிய பரதன் வினா 2137. | அன்ன தன்மை அக நகர் நோக்கினள், பின்னை, அப் பெரியோர்தம் பெருந்தகை, ‘மன்னன் வைகும் வளநகர் போலும் ஈது? என்ன தன்மை? இளையவனே!’ என்றான். |
அப் பெரியோர்தம் பெருந்தகை-அறிவு ஒழுக்கங்களாற் சிறந்த பெரியோர்களாற் போற்றப்படும் பெருமையுடைய குணத்தாற் சிறந்த பரதன்; அன்ன தன்மை - மேற்கண்ட தன்மையுடைய;அகநகர் - நிலைகெட்டநகரின் உட்பகுதியே; நோக்கினன் - பார்த்தான் (சிந்தித்தான்); பின்னை - பிறகு;(சத்துருக்கனனை நோக்கி)இளையவனே!- தம்பியே; ஈது - இவ் அயோத்தி; மன்னன்வைகும் வளநகர் போலும்- தயரத மன்னன் வீற்றிருந்த ஆட்சி செய்யும் வளமான நகராகவாஉள்ளது?. என்ன தன்மை - எந்தத் தன்மையை உடையதாய்உள்ளது; என்றான் -. நகர் அகம் என்பது அகநகர் என மாறியது. அரசன் இல்லாத நகரம் போல உள்ளது என்றான்.‘போலும்’ என்றது ஐய வினா? முன் ஏழு பாடல்களாற் சொல்லிய நகரின் அழகிழந்த தோற்றத்தைஇச்செய்யுளில் ‘அன்ன தன்மை’ என்பது குறிப்பிடும். 36 |