214. | ‘ “அந் நான்மறையோன் வழியில், அருள் காசிபன் நல் மைந்தன், மின் ஆர் புரி நூல் மார்பன், விருந்தேசனன் மெய்ப் புதல்வன், நல் நான்மறை நூல் தெரியும் நாவான் சலபோசன் எனச் சொன்னான் முனிவன் தரு சுரோசனன் யான்” என்றான். |
பிரமன் - காசிபன், விருத்தேசனன், சலபோசன், சுரோசனன் எனக் குல முறைக்காண்க. 76-2 |