2174.‘மாளவும் உளன், ஒரு மன்னன் வன் சொலால்;
மீளவும் உளன் ஒரு வீரன்; மேய பார்
ஆளவும் உளன் ஒரு பரதன்; ஆயினால்,
கோள் இல அறநெறி! குறை உண்டாகுமோ?

     ‘ஒரு மன்னன் - ஓர் அரசன் (தயரதன்); வன் சொலால் -
(கைகேயியின்வரம் என்ற) கொடுஞ்சொல்லால்; மாளவும் உளன் - தன்
உயிரை விடவும் இருக்கிறான்; ஒரு வீரன் - ஓர் ஆண்மகன் (இராமன்);
மீளவும் உளன் - தான் ஆள வேண்டிய அரசைவிட்டுக் காடு) செல்லவும்
இருக்கிறான்; மேய பார் - (இவ்வாறு வந்து சேர்ந்த)பூமியை; ஆளவும் -
ஆட்சிபுரியவும்; ஒரு பரதன்- பரதன் என்ற ஒருவன்; உளன்- இருக்கிறான்;
ஆயினால் - இவ்வாறானால்;  அறநெறி கோள் இல - தரும வழிகுற்றம்
உடையதன்று; சிறந்ததே; குறை உண்டாகுமோ - ஒரு குறையும்
உடையதாகுமா?’

     இகழ்ச்சிக் குறிப்பாளகக் கொள்க.  நடந்தவற்றைக் கூறி நன்று! நன்று!
என்று தன்னைத்தானே நகையாடிக்கொண்டான் பரதன். “கைகேயி! தாயே!
அம்மா உன் ஏற்பாடு அறநெறிக்குக் கோளேஇல்லாத ஏற்பாடு; இனி
அறநெறிக்குக் குறை உண்டாகுமோ” என்று கேட்டாளாம்.              73