2176.‘கவ்வு அரவு இது என இருந்திர்; கற்பு எனும்
அவ் வரம்பு அழித்து, உமை அகத்துளே வைத்த
வெவ் அரம் பொருத வேல் அரசை வேர் அறுத்து,
இவ் வரம் கொண்ட நீர் இனி என் கோடிரோ?

    ‘கற்பு எனும் அவ் வரம்பு அழித்து- கற்பு என்று சொல்லப்படுகின்ற
பெண்களுக்குரிய அறநெறிய்ன் வரம்பை அழித்து’ உமை அகத்துஉளே
வைத்த - உம்மை (காதலியாகத்) தன் நெஞ்சத்துள்ளே நிலை
நிறுத்திக்கொண்ட; வெவ்அரம் பொருத வேல் அரசை - கொடிய
அரத்தால் அராவப் பெற்ற வேற்படையை உடைய அரசனை; வேர்
அறுத்து
- அடியோடு கெடுத்து; இவ்வரம் கொண்ட நீர் - இந்த
வரங்களைப்பெற்றுக்கொண்ட  நீர்;  கவ்வு அரவு இது என இருத்திர் -
அகப்பட்டவரைக் கவ்விஅடியோடு அழிக்கும் பாம்பு இது எனச்
சொல்லும்படியாக இருந்துகொண்டுள்ளீர்!;  இனி என்கோடிரோ -
இனிமேல் எதைக் கொள்ளப் போகிறீரோ?’

     கணவன் உரைக்கு மாறுபடலின் கற்பை அழித்தாள் என்றான்.
அன்புடைய கணவன் உயிர்போதற்குக் காரணம் ஆகி, பின்னர் வரும்
பிள்ளைக்கும் பெருந் துன்பம் செய்தாள் ஆதலின்‘கல்வு அரவு’ என்றான்.
அகப்பட்டோரை எல்லாம் பற்றிக் கொல்லும் அரவு’ என்றான்  -தயரதன்,
இராமன், அயோத்திவாழ்வார், பரதன் என்று அனைவர்க்கும் தீங்கு
செய்தலின்.                                                   75