கோசலை பரதனை வினாவுதல்  

2197.‘மை அறு மனத்து ஒரு மாசு உளான் அலன்;
செய்யனே’ என்பது தேறும் சிந்தையாள்,
‘கைகயர் கோமகள் இழைத்த கைதவம்,
ஐய! நீ அறிந்திலை போலுமால்?’ என்றாள்.

     (இவன்) மை அறு - இயல்பாகவே குற்றம் அற்ற மனத்தின்கண்; ஒரு
மாசுஉளான் அலன்
- (கைகேயியால் ஏற்பட்ட ஒரு குற்றமும் உடையவன்
அல்லன்; செய்யன் - வேர்மையானவன்; என்பது தேறும் சிந்தையாள் -
என்பது தெளிந்த மனத்தினன்ஆனாள், (பின்னர்ப் பரதனைப் பார்த்து);
‘ஐய!- ஐயனே; நீ கைகயர் கோமகள்- கேகய நாட்டு அரசமன் மகளாகிய
கைகேயி; இழைத்த கைதவம் - செய்த வஞ்சனை; அறிந்திலை போலும்’-
(முன்னமே) அறியாய் போலும்; என்றாள். -.

     முன்பு மாசு உள்ளானோ என்று கோசலை ஐயுற்றாள் என்பதை
மேற்பாட்டில் (2196)  ‘சலம் ’என்று  குறித்துள்ளார்.  இங்கே ‘செய்யனே’
என்பது தெளிந்தாளாம். ‘ஐய’ என்பதுஉள்ளன்பினால் ‘தலைவ’ என
அழைத்தாளாம். கைகேயி அல்லது உன் தாய் என்னாமல் கைகயர்கோமகள்
என்றழைத்தது அவள் அரசின்கண் ஆசைப்பட்டதற்குக் காரணம் சொன்னது
போலத்தோற்றிநயம் செய்கிறது. ‘ஆல்’ அசை. ‘செய்யனே’ ‘ஏ’ காரம்
தேற்றம்.                                                     96