2212.‘ஊண் அல உண் வழி நாயின் உண்டவன்,
“ஆண் அலன், பெண் அலன், ஆர்கொலாம்?” என
நாணலன், நரகம் உண்டு என்னும் நல் உரை
பேணலன், பிறர் பழி பிதற்றி, ஆக யான்,

     ‘யான்-; உண்வழி ஊண் அல நாயின் உண்டவன் - உண்ணுகின்ற
பொழுது உண்ணுதற்குஉரியது அல்லாதனவற்றை நாய்போல உண்டவன்;
ஆண் அலன் - ஆண்மைத் தன்மை உடையனல்லன்;பெண் அலன் -
(பிறப்பினால் ஆண் உருவத்தில் உள்ளபடியால்) பெண்ணும் அல்லன்; என-
என்று (உலகம் கேவலமாகப்) பேசும்படி; நாண் அலன் - அதற்குச் சிறிதும்
வெட்கப்படாதவனா யுள்ளவன்; நரகம் உண்டு என்னும் நல் உரை
பேணலன்
- ‘(தீயனசெய்தால்) நல்ல அறிவுரைகளைச் சிறிதும் மதியாதவன்;
பிறர்பழி பிதற்றி -(எப்பொழுதும்) பிறரது பழிகளையே (பலரும் அறியப்)
பிதற்றிக் கொண்டு திரிபவன்; ஆக - (இந் நால்வரும் செல்லும் நரக கதியில்
சேர்வேன்) ஆக.’

     ‘நாய் போல’என்பது, உண்ணத் தகாதன உண்ணுதல், தானே பிறரை
அடித்து  விரட்டி உண்ணுதல்ஆகியவற்றுக்கு உவமையாகக் கொள்க. பிறர்
நகைப்புக்கிடமாக வீரம், அஞ்சாமை, ஆண்மைசிறிதும் அற்றவன் ‘நாணலன்’
எனப்பெற்றான்.‘அலன்’ என ‘ன’ கர ஈற்றுச் சொல்லின் முடிதலின்
ஆணாயிருந்து ஆண்தன்மைஅற்றவன் எனப் பொருள்கொள்க.         111