2214.‘வில்லினும் வாளினும் விரிந்த ஆண் தொழில்
புல்லிடை உகுத்தனென், பொய்ம்மை யாக்கையைச்
சில் பகல் ஓம்புவான் செறுநல் சீறிய
இல்லிடை இடு பதம் ஏற்க, என் கையால்.

     ‘(யான்) வில்லினும் வாளினும் விரிந்த ஆண்தொழில் - வில்லாலும்
வாளாலும்செய்யத் தகும் விரிவான தீரச்செயலை; புல்லிடை உகுத்தனன் -
பயனற்ற வழியில்போக்கியவனாய்; பொய்ம்மை யாக்கையை -
பொய்த்தன்மை உடைய உடம்பை; சில்பகல் ஓம்பு வான் - சிலநாள்
பாதுகாக்க (உயிர்வாழ வேண்டி); சீறிய செறுநர் இல்லிடை- தன்னைக்
கேர்பித்துப் பகைத்தவர்கள் வீட்டில்; இடுபதம் - அவர்கள் இடுகின்ற
உணவை; என் கையால் ஏற்க - என் மையால் ஏற்று உண்பவனாக (நான்
ஆவேனாக.)’

     இதுவரை தீயவர்கள் செல்லும் கதி என்று சொன்ன பரதன்,
தன்னையே அக்கேவலமானதீயவர்கள் நிலைக்கு ஆளாக்கிச் சூளுரை
இப்பாட்டில் சொல்லியுள்ளான். உயிர்வாழ ஆசைப்பட்டுப்பகைவர் போடும்
பிச்சைச் சோற்றைத் தின்று வாழ்தல் மிகக் கேவலமாம். பெருவீரம்
உடையவனாய் இருந்தும் அவ்வாறு இருத்தல் அதனினும் மிகக் கேவலம். 113