கோசலை பரதனை வாழ்த்துதல் 2220. | ‘முன்னை நும் குல முதலுளோர்கள்தாம், நின்னை யாவரே நிகர்க்கும் நீர்மையார்? மன்னர் மன்னவா!’ என்று, வாழ்த்தினாள் - உன்ன உன்ன நைந்து உருகி விம்முவாள். |
உன்ன உன்ன - நினைக்க நினைக்க; நைந்து - மனம் இற்றுப் போய்; உருகி - கரைந்து; விம்முவாள் - அகின்றவளாகிய கோசலை; ‘மன்னர் மன்னவா!- இராச ராசனே!; முன்னை - உனக்கு முன்பாக அரசாண்ட; நும் குல முதலுளோர்கள் தாம்- நும்குலத்து முன்னோர்களுள்; யாவர் - எவர்; நின்னை நிகர்க்கும் நீர்மையார்!- உன்னை ஒத்த தன்மை உடையவர்கள்;’ என்று வாழ்த்தினாள் - பாராட்டி வாழ்த்துரைத்தாள். ‘யாவரே’ ஏகாரம் வினாப்பொருட்டு. வரத்தால் அரசு தேடிவரவும் வேண்டாம் என்றுவெறுத்தொதுக்கும் இராமனது குணம் பரதன் மாட்டும் கண்டனள் ஆதலின், பாராட்டி “மன்னர்மன்னவா” என்றாள். 119 |