223.துந்துமி முழங்க, தேவர்
     தூய் மலர் பொழிந்த வாழ்த்த,
சந்திர வதனத்து ஏயும்
     அரம்பையர் தழுவ, தங்கள்
முந்து தொல் குலத்துளோரும்
     முக்கணான் கணமும் சூழ,
அந்தரத்து அரசன் சென்றான்,
     ஆன தேர்ப் பாகன் சொல்லால்.

     அரசன் - தயரதன்.                                    59-1