6. கங்கைப் படலம்

224.அன்ன காரணத்து
     ஐயனும், ஆங்கு அவர்
உன்னு பூசனை
     யாவும் உவந்தபின்,
மின்னு செஞ் சடை
     மெய்த் தவர் வேண்டிட,
பன்ன சாலையின்
     பாடு இருந்தான் அரோ.

     பன்ன சாலை - தவத்தோர் தங்கும் குடில்;  பர்ண சாலை - பன்ன
சாலை ஆயிற்று; இலை, தழைகளால் வேயப்பெற்றது. ‘அரோ’ அசை.   27-1