7. குகப் படலம்

225.நின்றான் நெஞ்சில்
     நிரம்புறும் அன்பால்,
‘இன்றே நின் பணி
     செய்திட, இறைவா!
நன்றே வந்தனென்;
     நாய் அடியேன் யான்’
எயினரின் இறையோன்.

     எயினர்- வேடர்; இறைவா- இராமனே;கூவினன்- அழைத்தான். 10-1