2252.‘முறை தெரிந்து ஒரு வகை முடிய நோக்குறின்,
மறையவன் வகுத்தன, மண்ணில், வானிடை,
நிறை பெருந் தன்மையின் நிற்ப, செல்வன,
இறைவரை இல்லன யாவும் காண்கிலம்,

     ‘முறை தெரிந்து - முறைமையை நன்கு ஆராய்ந்து; ஒருவகை முடிய
நோக்குறின்
-ஒருபடித்தாக இறுதிவரை பார்த்தால்; மறையவன் வகுத்தன -
பிரமனால் படைக்கப்பட்டனவாகிய;மண்ணில் வானிடை - நிலத்திலும்,
விண்ணிலும்; நிறை பெருந்தன்மையின் - நிறைந்துவிளங்கும்
பேரியல்போடு; நிற்ப -நிலைத்து நிற்பன; செல்வன - இயங்குவன (வாகிய
பொருள்களில்); இறைவரை இல்லன - தலைவரைப் பெற்றிராத
பொருள்கள்; யாவும் எவையும்; காண்கிலம் - காண்கின்றிலோம். (யாம்)’

     உலகிற்கு - மன்னர் இன்றியமையாமை மேல் கூறியது. இங்குச் சரம்,
அசுரம் ஆகிய இயங்கும்,இயங்காப் பொருள்களுக்கும் தலைவர்
இன்றியமையாமை உணர்த்தப்பெற்றது. ‘நிற்ப’ என்பன மலை,மரம்
முதலியன. ‘செல்வ’ என்பன மக்கள், விலங்கு, பறவை முதலிய உயிர்களாம்.
அவற்றிடையேகூடஒரு தலைமை என்பது உண்டு என்பது அறியப்படும்.   9