பரதன் தன் மனக் கருத்தை அரசவைக்கு எடுத்துச் சொல்லுதல்  

2257.‘மூன்று உலகினுக்கும் ஓர் முதல்வன் ஆய், முதல்
தோன்றினன் இருக்க, யான் மகுடம் சூடுதல்,
சான்றவர் உரைசெயத் தருமம் ஆதலால்,
ஈன்றவன் செய்கையில் இழுக்கு உண்டாகுமோ?

    ‘மூன்று உலகினுக்கும்- மேல், நடு, கீழ் என்னும் மூன்று இடங்களில்
உள்ள மூன்று உலகங்களுக்கும்; ஓர் முதல்வன்ஆய் - ஒப்பற்ற
முதற்பொருளாகி; முதல் தோன்றினன் இருக்க - (எனக்கு) முன்னே
பிறந்தவனாகிய இராமன் இருக்கின்ற போதே;  யான் மகுடம் சூடுதல் -
யான் அரசனாக அரசுகட்டில் ஏறி மணிமகுடத்தைச் சூடிக்கொள்ளுதல்;
சான்றவர் உரைசெய - பெரியோர்கள்தக்கதே என்ற தம் வாயால்
எடுத்துரைக்க; தருமம் ஆதலால் - அறம் என்று கருதப்படுகின்றது
ஆதலாம்;  ஈன்றவள் செய்கையில் - (இதே செயலைச் செய்த) என்னைப்
பெற்றதாயாகிய கைகேயியின் செயற்பாட்டில்;  இழுக்கு உண்டாகுமோ -
தவறு உளதாகுமா?’

     ‘மூத்தவன் இருக்கஇளையவனாகிய நான் அரசு புரிவது  தருமம்
என்று வசிட்டரே கூறினால்கூறினால் என்தாய் கூறியதில் என்ன தவறு?
என்கிறான் பரதன்.
பெரியோர்கள்வார்த்தையும்  தர்மவிரோதமாக
இருக்கின்றதே என் திறத்தில் என்றுபுலம்பினானாம். ‘ஓ’ காரம்
வினாப்பொருட்டு.                                          14