226. | வெயில் விரி கனகக் குன்றத்து எழில் கெட விலகு சோதிக் கயில் விரி வயிரப் பைம் பூண் கடுந் திறல் மடங்கல் அன்னான் துணில் எனும் அணங்கு வந்து தோன்றலும், அவளை, ‘நாமே எயிலுடை அயோத்தி மூதூர் எய்து நாள் எய்துக!’ என்றான். |
கனகக் குன்றத்து....சோதி என்றது இலக்குவன் திருமேனியை; கயில்- மூட்டு; மடங்கல் - சிங்கம். சிங்கம் அன்னான் இலக்குவன். தூக்கம் என்னும் மகள்அங்கே வந்தாள். அவளை நாம் அயோத்திக்கு வருகின்ற நாளில் எம்பால் வருக என்றான்இலக்குவன்; பதினான்கு ஆண்டுகளும் உறங்காமல் இருந்தான் ஆதலின் ‘உறங்காவில்லி’ என்பது அவனுக்கு ஒரு பெயர். 22-1 |