228. | மற்றவள் இறைஞ்சி ஏக, மா மலர்த் தவிசின் நீங்காப் பொற்றொடி யோடும் ஐயன் துயில்தரும் புன்மை நோக்கி, இற்றது ஓர் நெஞ்சன் ஆகி, இரு கண் நீர் அருவி சோர, உற்ற ஓவியம்அது என்ன, ஒரு சிலை அதனின் நின்றான். |
ஒரு சிலை - ஒரு கல். இனி ஒரு வில் எனலும் ஆம் ‘வில்லை ஊன்றிய கையோடும்நின்றான்’ என வருதலின.் 22-3 |