2282.நறை அறு கோதையர் நாள் செய் கோலத்தின்
துறை அற, அஞ்சனம் துறந்த நாட்டங்கள்
குறை அற நிகர்த்தன - கொற்றம் முற்றுவான்.
கறை அறக் கழுவிய கால வேலையே.

     நறை அறு கோதையர் - வாசனைப் புகை  ஊட்டாத கூந்தலை
உடைய மகளிர்;  நாள்செய் கோலத்தின் துறை அற - நாள்தோறும்
செய்யப்படுகின்ற அலங்காரத்தின் தன்மைகள்நீங்கினமையால்;  அஞ்சனம்
துறந்த -
மை தீட்டப் பெறாத (இயற்கையான தோற்றத்தோடுஉள்ள)
கண்கள்; கொற்றம் முற்றுவான் - (போர்செய்து) வெற்றியை முடித்த
ஒருவன்;  கறை அறக் கழுவிய - போர்காலத்துப் படித்த போன்ற
வேற்படையை;  குறை அற நிகர்ந்தன- குறைவில்லாமல் ஒத்திருக்கின்ற
ஆயின.

     மை எழுதாத கண்கள் இரத்தக்கறை கழுவிய வேலைப் போன்றன. ‘ஏ’
காரம்ஈற்றசை.                                                39