9. சித்திரகூடப் படலம் 229. | ‘நெய் கொள் நீர் உண்டு, நெருப்பு உண்டு, நீண்டு, மைந் நிறைந்த வை கொள் வேல் எனக் காலனும் மறுகுறும் கண்ணாய்! மெய்கள் நோகின்ற பிடிகளை விரும்பிய வேழம் கைகள் நோகில தாங்கின நிற்பன காணாய்!’ |
மெய் நோவுற்ற பெண்யானைகளை ஆண் யானைகள் தம் கை நோவு கருதாது தாங்கிக்கொண்டுநிற்பனவாம். 36-1 |