230.‘விடம் கொள் நோக்கி! நின்
     இடையின் மின் என வெருவி,
படம் கொள் நாகங்கள் முழை
     புகப் பதைப்பன பாராய்!
மடங்கள் ஆளிகன் எனக்
     கொடு மழைஇனம் முழங்க,
கடம் கொள் கார் மதக்
     மைம்மலை இரிவன காணாய்!

     மின்னலைக் கண்டு பாம்பு அஞ்சும். இடிகேட்டு வெருளும் நாகம். இடி,
மின்னல் இரண்டும்ஒன்றே. சிங்கம் போல மேகம் முழங்க யானைகள்
ஓடுகின்றன.                                                36-2